சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சருமான உம்மன் சாண்டி காலமானார். இதனையடுத்து கேரளாவில் 3நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், திமிரு, சிலம்பாட்டம், மரியானில் வில்லனாக நடித்த விநாயகன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், உம்மன் சாண்டி யார்? அவர் இறந்ததற்காக ஏன் 3நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும், மீடியாக்களும் ஏன் அவரது இறப்பை இப்படி பெரிதுபடுத்தி காட்சிப்படுத்துகிறது. அவர் நல்லவர் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை அவர் நல்லவர் இல்லை. ஆதலால் இதையெல்லாம் நிறுத்திவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் விநாயகன் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் பிறகு, உம்மன் சாண்டி குறித்து அவர் வெளியிட்ட விடியோவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.