ஆயிரத்தில் ஒருவன் பட பிரபலம் மரணம்!

செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக கருதப்படும் இந்த படத்தில், கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்.

இவர், இந்த படம் மட்டுமின்றி, சர்க்கார், தர்பார் போன்ற படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, காலமானார். தரமான படைப்புகள் மூலமாக பிரம்மிக்க வைத்த இவர் உயிரிழந்திருப்பது, ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.