ஆருத்ரா கோல்டு நிறுவனமானது பொதுமக்களிடம் ரூ2,000 கோடி வசூல் செய்து ஏமாற்றி இருக்கிறது. இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பெயரில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பாஜக நிர்வாகி ஹரீஷ் அதிரடியாக கைது செய்யபப்ட்டார்.
ஆருத்ரா நிறுவன ஹரீஷிடம் லஞ்சம் பெற்ற பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், ஹரீஷிடம் பதவி தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் கோபம், பாஜக மீது திரும்பி உள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை இன்று ஆருத்ரா முதலீட்டாளர்கள் முற்றுகையிட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.