நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு, வணங்கான் என்ற படத்தில், சூர்யாவும், பாலாவும் இணைய இருந்தனர். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், இந்த கதை சூர்யாவுக்கு செட் ஆகவில்லை என்று கூறி, படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இருப்பினும், படம் ட்ராப் ஆகவில்லை.. வேறொரு நடிகரை வைத்து, இந்த திரைப்படம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. அதர்வா உள்ளிட்ட பல்வேறு இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Test Shoot முடிந்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும், கூறப்படுகிறது.