பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ள தனுஷ், தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில், அருண்விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன் என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திற்காக அருண் விஜய் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, 8 கோடி ரூபாயை அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இது, அருண் விஜய் பொதுவாக வாங்கும் சம்பளத்தை விட, 3 மடங்கு அதிகம் என்றும், கூறப்படுகிறது.