மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டப் பேரவைகள் தேர்தல்கள் நடந்தன.
அருணாச்சல் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில், பாஜக 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அருணாச்சல பிரதேசத்தில் 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.