2-வது திருமணம் செய்துக் கொண்ட நெருப்பு குமார்!

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இவரது மனைவி சிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சோகத்தில் நிறைந்திருந்த அருண்ராஜா, அதில் இருந்து மீள்வதற்கு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ், கடந்த 28-ஆம் தேதி அன்று, இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.