அருண்ராஜா காமராஜ் உடன் இணையும் ராசியில்லா நடிகர்!

கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இதையடுத்து, நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை, உதயநிதியை வைத்து இயக்கியிருந்தார்.

இந்த படமும், ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ராசியில்லாத நடிகருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஜெய்-யை வைத்து, புதிய வெப் சீரிஸ் ஒன்றை, அருண் ராஜா இயக்க உள்ளார்.

சில நடிகர்கள், நல்ல படங்களில் நடித்தாலும், அது வெற்றியை பெறாது. அதுபோன்ற நடிகர்களை ராசியில்லாத நடிகர்கள் என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில், ஒருவராக உள்ள ஜெய்யுடன், தற்போது அருண்ராஜா இணைந்திருப்பது, பேசுபொருளாக மாறியுள்ளது.