டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த 5-ஆம் தேதி அன்று, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் இடையே, மும்முனை போட்டி நிலவி வந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காலை முதலே, பாஜக தான் அதிக இடங்களில், முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு அடுத்த படியாக, ஆம் ஆத்மி இருந்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இவ்வாறு இருக்க, அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட டெல்லி தொகுதியின் முன்னிலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதன்படி, ஆரம்ப கட்டங்களில், பாஜகவின் வேட்பாளர் பர்வேஷ் குமார் முன்னிலை வகித்து வந்தார். தற்போது, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை வகிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், வெறும் 343 வாக்குகள் வித்தியாசத்தில் தான், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்பதால், ஆம் ஆத்மி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.