டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், தேர்தல் பிரச்சாரங்களுக்காக, ஜாமீன் பெற்று வெளியே வந்திருந்தார்.
இவரது ஜாமீன் மனு நாளை முடிய இருப்பதால், மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார். இதற்கிடையே, இன்று 7-வதும், கடைசி கட்டமுமாக, 8 மாநிலங்களில், 57 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் வாக்கு செலுத்தும் வாக்காளர்களுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட அவர், “இந்த ஜனநாயக பெருவிழாவில், கடைசி கட்டமாக, இன்று, நாடு வாக்கு செலுத்த உள்ளது.
ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க, உங்களது உரிமையை பயன்படுத்தி, அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுடன் சேர்ந்து, அக்கம் பக்கத்தினரையும், வாக்களிக்க அழைத்து செல்லுங்கள். சர்வதிகாரம் தோல்வி அடைய வேண்டும்.. ஜனநாயகம் வெல்ல வேண்டும்” என்று கூறினார்.