விருமன் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் முத்தையா, அடுத்ததாக ஆர்யாவை வைத்து, படம் இயக்க இருப்பதாக முன்பு அறிவித்தார்.
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்று டைட்டில் வெளியான பிறகு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.
ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்குநூறாக உடைக்கும் வகையிலேயே, படத்தின் விமர்சனம் இருந்தது. இதனால், படம் படுதோல்வியை சந்தித்ததாக, சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜீ5 ஓடிடி தளம் வாங்கியுள்ள இப்படம், வரும் 7-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
இதேபோல், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்த ஃபர்ஹானா திரைப்படமும், 7-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், சோனி லிவ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.