தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர், தன்னுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை சாயிஷாவை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும், சமூக வலைதளப் பக்கத்தில், தங்களது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும், ஆர்யாவின் மகள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என்றும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
