பா.ரஞ்சித் மற்றும் ஆர்யா ஆகிய இரண்டு பேரும், சார்பட்டா பரம்பரை படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.
அதாவது, பா.ரஞ்சித் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அப்படத்தில், ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும், அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.