Connect with us

Raj News Tamil

பிரபல தமிழ் நடிகரின் வெறித்தனமான Transformation! ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

பிரபல தமிழ் நடிகரின் வெறித்தனமான Transformation! ரசிகர்கள் ஆச்சரியம்!

தமிழ் சினிமாவில், உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் ஆர்யா. குறிப்பாக, இவர் நடித்திருந்த கடம்பன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில், உடலை இரும்பு போல் மாற்றியிருப்பார்.

அதிலும், சார்பட்டா பரம்பரை படத்தில், நிஜ குத்துச் சண்டை வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், டிரான்ஸ்பார்மேஷன் அடைந்திருப்பார். இவ்வாறு இருக்க, தற்போது மீண்டும் தனது உடலை இரும்பு போல் ஆர்யா மாற்றியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தையும், சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த மாற்றம் எதற்காக என்று விசாரித்தபோது, மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு தான் என்ற பதில் கிடைத்துள்ளது.

அது விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் தான், ஆர்யா இவ்வளவு கட்டுக்கோப்பாக உடலை மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஆர்யாவின் டெடிகேஷனை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top