கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதனை முறியடித்து, இந்திய அணியில் நுழைந்து, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் அஸ்வின்.

சுழற்பந்து வீச்சாளராக அணியில் நுழைந்த இவர், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும், மொத்தமாக 765 விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார். குறிப்பாக, டெஸ்ட் போட்டியில் மட்டுமே 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றி, சாதனை படைத்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், விளையாடி வந்தார். 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், அனைத்து விதமான டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, தற்போது அறிவித்துள்ளார். மேலும், பிசிசிஐ-க்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News