Connect with us

Raj News Tamil

500 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை! – தமிழக முதல்வர் வாழ்த்து!

விளையாட்டு

500 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை! – தமிழக முதல்வர் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அனில் கும்பிளே, டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்களுடன் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரராக உள்ளார். இந்த சாதனை பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘சாதனைகளை முறியடித்து கனவுகளை உருவாக்குவது, சென்னையின் சொந்த பையன், அஸ்வின்!

ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார். இது ஒரு உண்மையான மைல்கல்லை குறிக்கிறது! கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாக பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள். எங்கள் சொந்த ஜாம்பவானுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ!’ என பதிவிட்டுள்ளார்.

More in விளையாட்டு

To Top