500-வது விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை!

ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டி போட்டி (பிப்ரவரி15) ராஜ்கோட்டில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 500-வது விக்கெட்டாகும். டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை அஸ்வின் தனது 98-வது டெஸ்டில் படைத்துள்ளார்.

மேலும் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்

சேன் வார்னே – 708 விக்கெட்டுகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் – 690 விக்கெட்டுகள்

அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்

ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்

க்ளென் மெக்ராத் – 563 விக்கெட்டுகள்

கோர்ட்னி வால்ஷ் – 519 விக்கெட்டுகள்

நாதன் லயன் – 501 விக்கெட்டுகள்

அஸ்வின் – 500 விக்கெட்டுகள்

RELATED ARTICLES

Recent News