ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் அக்சர் படேல் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.