ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகல் 3 அணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது ஆட்டமாகும்.

காயம் காரணமாக லீக் சுற்றில் களமிறங்காத கே.எல்.ராகுல் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதேபோன்று நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொந்த காரணங்களுக்காக விலகி இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத்பும்ராவும் அணிக்கு திரும்பி உள்ளார். இவர்கள் இருவரும் களமிறங்கும் பட்சத்தில் இஷான் கிஷன், மொகமது ஷமி ஆகியோர் நீக்கப்படக்கூடும்.

RELATED ARTICLES

Recent News