Connect with us

Raj News Tamil

ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியா-இலங்கை இன்று மோதல்!

விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியா-இலங்கை இன்று மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகள் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன.

இந்தியா அணி வலுவாக இருந்தாலும் சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காத்திருப்பு ஞாயிற்றுக்கிழமை ஆசியக் கோப்பையை வெல்வதின் மூலம் முடிவுக்கு வரும் எனக் கருதப்படுகிறது.

இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ள இந்திய அணி 8-வது முறையாகவும் இலங்கை அணி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை பட்டம் வெல்வம் புதிய உத்வேகத்தை தரும் என்பதால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in விளையாட்டு

To Top