Connect with us

Raj News Tamil

ஆசிய கோப்பை: இந்தியா அணி அறிவிப்பு!

விளையாட்டு

ஆசிய கோப்பை: இந்தியா அணி அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இன்று மதியம் 12 மணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அஜித் அகர்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆசிய கோப்பைக்கான அணி அறிவிக்கபட்டது. அதன் விவரம் வருமாறு:-

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா.

More in விளையாட்டு

To Top