ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று (செப்.17) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முதலமைச்சராக அதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.
டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.