இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. A for Apple என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தாகாரம் ஆகிய திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளார்.
தற்போது, தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தை தயாரித்துள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 25-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லி, அவரது மனைவி பிரியா அட்லி உள்ளிட்டோர், குறிப்பிட்ட இடம் ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது, பிரியாவும், கீர்த்தி சுரேஷ்-ம் Pose கொடுக்க, அட்லி செல்போனில் படம்பிடிக்கிறார்.
இந்த சமயத்தில், திரும்பி வந்த கீர்த்தி சுரேஷ், “என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க” என்று உரிமையாக, அட்லியிடம் கேட்கிறார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.