Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

திருந்தவே திருந்தாத அட்லி? மீண்டும் அதே தவறு?

சினிமா

திருந்தவே திருந்தாத அட்லி? மீண்டும் அதே தவறு?

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்ற இவர், சில சர்ச்சைகளையும் சந்தித்து வந்தார். அதாவது, அந்த படத்தின் கதை, மௌன ராகம் படத்தின் கதை என்று கூறி பலர் விமர்சித்திருந்தனர்.

இவ்வாறு, அட்லியின் ஒவ்வொரு திரைப்படங்கள் வெளியாகும்போதும், அது இன்னொரு திரைப்படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்நிலையில், தற்போது அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படமும், தமிழ் படம் ஒன்றின் காப்பி என்று புகார் எழுந்துள்ளது.

அதாவது, விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு திரைப்படத்தின் கதை தான், ஜவான் படத்தின் கதை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், “இவர் திருந்தவே மாட்டாரா.. மீண்டும் அதே தவறை செய்கிறார்” என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top