சினிமா
“விஜய் எனக்கு வேணா” – முடிவை மாற்றிய அட்லி?
தளபதி விஜயும், இயக்குநர் அட்லியும், தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இந்த கூட்டணி, தளபதி 68 படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் படத்தை விஜய் முடித்த பிறகும், ஜவான் படத்தை அட்லி முடித்த பிறகும், இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, அட்லி அடுத்ததாக சல்மான் கான் உடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, சல்மான் கான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login