Connect with us

Raj News Tamil

அட்லியை சின்ன பையன் என்று கிண்டல் பண்ணிய அஜித்!

சினிமா

அட்லியை சின்ன பையன் என்று கிண்டல் பண்ணிய அஜித்!

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு பிறகு, தெறி, மெர்சல், பிகில், ஜவான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்கிய அனைத்து படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில், அட்லி சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ராஜா ராணி படத்தை முடித்த பிறகு, நயன்தாரா உதவியுடன், அஜித்திற்கு தான் முதலில் கதை சொல்ல முயன்றேன். ஆனால், நான் பள்ளி மாணவன் போல் உள்ளதாக, அஜித் என்னை கிண்டல் செய்தார் என்று அட்லி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை எங்கிட்ட இருக்கு. அவர் ஓகே சொன்ன உடனே, அந்த படத்தை எடுக்க நான் தயார் என்றும் கூறினார். அப்படி அது நடக்கும்போது, அந்த திரைப்படம் வெடியாக தான் இருக்கும் என்றும், அட்லி தெரிவித்தார்.

More in சினிமா

To Top