அட்லியின் தோற்றம்.. கிண்டலடித்த தொகுப்பாளர்.. பதிலடி தந்த இயக்குநர்!

அட்லி இயக்கியிருந்த தெறி திரைப்படம், தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தை, அட்லியே தான் தயாரித்தும் உள்ளார். வருன் தவான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக, பிரபல இந்தி ஊடகத்திற்கு அட்லி பேட்டி அளித்துள்ளார். அப்போது, அவரது தோற்றம் குறித்து,கிண்டலாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அட்லி, “முதல் திரைப்படத்தை இயக்கும்போது, என்னுடைய கதையை நம்பி தான், ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ப்பு கொடுத்தார். தோற்றத்தை வைத்து அவர் என்னை எடைபோடவில்லை” என்று கூறினார்.

மேலும், “ஒருவரது தோற்றத்தை வைத்து, அவர் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்காதீர்கள். அவரது மனசை வைத்து தீர்மானியுங்கள்” என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News