ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று தமிழில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தவர் அட்லி. இவர், ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து, மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது. இதனால், பாலிவுட்டில் அட்லிக்கு மிகப்பெரிய மார்கெட் கிடைத்தது.
தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து, புதிய படம் ஒன்றை அவர் இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்து அதிரடி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும், 250 கோடி ரூபாயை செலவு செய்ய, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். மேலும், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் எல்லாம் சேர்த்தால், மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.