தங்கலான் என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு, வேட்டுவம் என்ற படத்தை, பா.ரஞ்சித் இயக்க உள்ளார். இந்த படத்தில், அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷின் ஜோடியாக, யார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சோபிதா துலிபாலா தான், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். இவர் பிரபல நடிகர் நாக சைத்தன்யாவின் மனைவி என்பதும், திருமணத்திற்கு பிறகு இவர் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.