பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 5 வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா பீளமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தற்போது ரம்யா ‘சுந்தரி, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ரமேஷ் தனது இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தனது தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷை சந்திரசேகரன் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ரம்யா மற்றும் சந்திரசேகரை கைது செய்த கோவை மதுக்கரை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.