கும்மிடிப்பூண்டியில் ATM இயந்திரத்தின் அடி பாகத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள SBI வங்கியின் ATM மையத்தில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் ATM இயந்திரத்தின் அடி பாகத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அபாய ஒலி ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் தடையவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்கள் கையுறை பயன்படுத்தி இயந்திரத்தை உடைத்ததால் கைரேகையை கண்டறிய முடியாமல் திகைத்தனர். மேலும் மோப்பநாயை வரவழைத்து சோதனை மேற்கொண்டதில் மோப்ப நாயும் அருகாமையில் உள்ள காலியிடங்களை சுற்றி மீண்டும் ஏடிஎம் மையத்தை நோக்கி திரும்பி வந்ததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.