2025-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் கூட்டத் தொடர் நடந்துள்ள நிலையில், இன்று 3-வது நாளுக்கான கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த கூட்டத் தொடரில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு, எதிர்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதாவது, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஐ, சிபிஎம், பாஜக உள்ளிட்ட கட்சியினர், இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன.
இந்த தீர்மானம் சபாநாயகர் அப்பாவுவால் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பதில் அளிக்க உள்ளார்.