குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலிய அணியும், பலப்பரீட்சை நடத்தின. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 6-வது முறையாக, உலக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள், தங்களது நாட்டிற்கு சென்றனர். இதில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ்-ம் தனது சொந்த ஊருக்கு, சென்றடைந்தார்.
ஆனால், அவருக்கு எந்தவொரு வரவேற்பும், அரசு சார்பில் வழங்கப்படவில்லை. பேட் கம்மின்ஸின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் மட்டும் தான், விமான நிலையத்திற்கு வந்து, அவரை வரவேற்றனர்.
இந்த சம்பவம், இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. உலகக் கோப்பையை வாங்கிய வீரருக்கான வரவேற்பு இவ்வளவு தானா என்று கருத்து கூறி வருகின்றனர்.