பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அங்கு, 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி விளையாடியது. இதில், முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2 போட்டிகளில், ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது.
இதனால், கடைசி போட்டியில், இந்தியா வென்றால், தொடர் டிராவ், ஆஸ்திரேலியா வென்றால், வெற்றி என்ற நிலை இருந்தது. இவ்வாறு இருக்க, நேற்று முன்தினம், சிட்னி நகரில், டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது.
இவ்வாறு இருக்க, முதல் இன்னிங்சில் 4 ரன்கள் லீடிங்கில் இருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில், 157 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 162 ரன்கள் என்று, ஆஸ்திரேலிய அணிக்கு டார்கெட் வைக்கப்பட்டது.
முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, பின்னர் நிதானமாக விளையாடி, வெற்றி பெற்றது. 3 நாட்களிலேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வெற்றியின் மூலமாக, 3-க்கு 1 என்ற கணக்கில், ஆஸ்திரேலியா அணி, கோப்பையை கைப்பற்றியுள்ளது.