சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவர் சில நாட்களுக்கு முன் புதிதாக மாருதி வாங்கி இருந்த நிலையில் இன்று காருக்கு காற்று அடிப்பதற்காக வைஷ்ணவி நகரில் இருந்து திருமுல்லைவாயில் பஞ்சர் கடைக்கு தனது காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
வைஷ்ணவி கோவில் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்தது. ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநருக்கு கை முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண்களின் ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் மற்றோருக்கு சிறிய காயமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி துணை ஆணையர் புருஷோத்தமன் காயம் ஏற்பட்டவர்களுக்கு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு போக்குவரத்துக்கு சரி செய்யப்பட்டது.