பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 100% தள்ளுபடி அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் 73 ஆவது பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். குறிப்பாக சூரத்தில், 73 ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதே போன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், மாற்றுத்திறனாளிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை தயாரித்து வாழ்த்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News