தமிழ் சினிமாவில், காதல் திரைப்படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருந்து வருகிறது. அவ்வாறு, தமிழ் ரசிகர்களால், மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் ஆட்டோகிராஃப்.
சேரன் இயக்கி நடித்திருந்த இந்த திரைப்படம், 4 தேசிய விருதுகளை பெற்றிருந்தது. இந்நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு, இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை, ஏ.ஐ ட்ரைலர் மூலமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஏ.ஐ. ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.