உலகில் பலரும் அறியப்பட்ட மிகவும் பிரபலியமான செயலி வாட்ஸ்அப் .இதில் அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்து பயனா்களை குஷிப்படுத்தும் .இதைத்தாண்டி சில அப்டேட்டுகள் முகம் சுலிக்க செய்யும். இந்நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது,வாட்ஸ் அப்பின் அம்சங்களைப் பற்றி தகவல்களை வெளியிடும் WABetaInfo இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாட்ஸ் அப் சேனல்களை இயக்குபவர்கள் மீடியா ஃபைல்களை ஒழுங்கமைப்பதை எளிதாகச் செய்ய இயலும். சேனலில் ஷேர் செய்யப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆல்பத்தில் சேமிக்கப்படும்.
சேனலில் மீடியாவை ஷேர் செய்ய பயனர்கள் நேரடியாக இந்த ஆல்பத்திற்குச் செல்ல முடியும். ஒரு வாட்ஸ் அப் சேனலின் அட்மின் ஒரு சேனலில் தொடர்ச்சியாக பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.
வாட்ஸ் அப் தானாகவே அவற்றை ஒன்று சேர்த்து ஆல்பமாக ஒழுங்கமைத்தது. மேலும் சேனலைப் ஃபாலோ செய்பவர்கள் அனைத்து சேகரிப்பையும் அணுக ஆட்டோமேட்டிக் ஆல்பத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சாட்கள் மற்றும் க்ரூப்களுக்கு இருந்து வருகிறது. ஆனால், சேனல்களுக்கு இதுவரை இல்லை. தற்போதுதான் இந்த வசதி சேர்க்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யும் ஆண்ட்ராய்டு பயனர்களால் இந்த வசதியை பெற முடியும். வரும் நாட்களில் இந்த வசதி படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளுக்கு பலரும் தங்களது கருத்துகளை கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.