வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. உணவு வழங்கி உதவிய ஆவடி காவல்துறையினர்..

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, நேற்று முன்தினம் ஆரஞ்சு அலர்ட்டும், நேற்று ரெட் அலர்ட்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டது. இதன்காரணமாக, இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, உணவு இன்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு, அம்மா உணவகம் வழியாகவும், சில தன்னார்வலர் இயக்கம் சார்பிலும், உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஆவடி பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் பொதுமக்களும், இந்த கனமழையின் காரணமாக, பெரும் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவடி காவல் நிலையம் சார்பாக இன்று சுமார் 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி சரக உதவி ஆணையாளர் அன்பழகனும், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்கினார்கள். சேவை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News