பொங்கல் பண்டிகை என்பது, தமிழர்களின் மிகமுக்கியமான திருநாளாக பார்க்கப்படுகிறது. இந்த திருநாள் அன்று, தமிழர்களின் வீரவிளையாட்டுகளாக உள்ள உறி அடித்தல், கபடி, சிலம்பம் சுற்றுதல், ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.