விஜய் அஜித்திற்கு இணையாக கெத்து காட்டும் அவதார்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் அவதார். உலகம் முழுவதும் பெரும் வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதால், அதிகாலைக் காட்சிகள், திரையரங்கில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அஜித் – விஜயின் படங்களுக்கு இணையாக, இந்த படத்தை காண்பதற்கும், ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.