200 மி.லி. ஆவின் பால் 9.50 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
‘ஆரஞ்சு வண்ணத்தில் 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வந்த நிலையில் புதிய வடிவமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் ‘வைலட்’ நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் ஆவின் பால் நேற்றைய தினம் ரூ.9.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.