பாஜக அபார வெற்றி.. கணிப்பு பொய்யானதால் கதறி அழுத தேர்தல் கணிப்பாளர்!

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களோடு, ஜூன் 1-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியில் இருந்து விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இதில், 400 இடங்கள் பெறும் என்று கூறிய பாஜக, தற்போது 293 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணி 233 இடங்களை மட்டும் தான் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா டுடே என்ற ஆங்கில தொலைக்காட்சியில், விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கலந்துக் கொண்டார்.

அப்போது, பாஜக கூட்டணி 401 இடங்களை கைப்பற்றும் என்ற ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் கணிப்பு தவிடு பொடியானது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது, பிரதீப் குப்தா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் கணிப்பு பொய்த்தது குறித்து, கேள்வி கேட்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News