சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது, கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம். இவ்வாறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட சிவகார்த்திகேயன் பலமுறை வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், இந்த முறை சிவகார்த்திகேயனுக்கு பலத்த தோல்வி ஏற்பட்டுள்ளது. அதாவது, இவர் நடித்திருந்த அயலான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.
தமிழகத்தில் மட்டுமே ஆதரவை பெற்ற இந்த திரைப்படம், மற்ற அனைத்து இடங்களிலும், பலத்த அடி வாங்கியுள்ளது.
குறிப்பாக, வெளிநாடுகளில், இப்படத்தின் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளதாம். 10 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் உரிமை விற்கப்பட்டதாம். ஆனால், அதற்கும் கீழ் தான், படத்தின் ஷேர் கிடைத்துள்ளதாம்.