Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லர், அயலான் ஓடிடி அப்டேட்! யாருக்கு எந்த ஓடிடி தெரியுமா?

சினிமா

கேப்டன் மில்லர், அயலான் ஓடிடி அப்டேட்! யாருக்கு எந்த ஓடிடி தெரியுமா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று, திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இதேபோல், பொங்கல் தினத்தை டார்கெட் செய்து, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் நேற்று வெளியானது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

இருப்பினும், குடும்ப ஆடியன்ஸின் வருகைக்கு பிறகு, இந்த விமர்சனங்கள் மொத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ஓடிடி உரிமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, கேப்டன் மில்லர் திரைப்படத்தை, அமேசான் பிரைம் ஓடிடியும், அயலான் திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் ஓடிடியும் வாங்கியுள்ளது.

படம் வெளியாகி, கிட்டதட்ட ஒரு மாதங்களுக்கு பிறகு, ஓடிடி-யில் இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top