Connect with us

Raj News Tamil

அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

சினிமா

அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நேற்று இன்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் அடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து, அயலான் என்ற படத்தை இயக்கி வந்தார்.

நீண்ட வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம், இன்னும் முடியாமல், பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 15-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4,500-க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top