Connect with us

Raj News Tamil

அயலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

சினிமா

அயலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

விஷ்னு விஷால், கருணாகரன் ஆகியோர் நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் உடன் இணைந்த ரவிக்குமார், அயலான் என்ற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

ஏலியன் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், இன்று நேற்று நாளை படம் வெற்றியை பெற்றதாலும், அயலான் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அறிவிப்பு வெளியாகி, 5 வருடங்கள் ஆகியும், படத்தின் சிறிய அப்டேட் கூட, தராமல் படக்குழுவினர் இருந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட்டை, ஒருவழியாக படக்குழுவினா் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக, கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், உற்சாகமாக இருந்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களனா மாவீரன், அயலான் ஆகியவை, இந்த வருடத்திலேயே வெளியாக உள்ளது, ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top