சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உருவான திரைப்படம் அயலான். எப்போதோ படப்பிடிப்பு முடிந்த நிலையில், வி.எப்.எக்ஸ் பணிகள் காரணமாக, இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது.
இவ்வாறு இருக்க, சமீபத்தில் வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், மீண்டும் வி.எப்.எக்ஸ் பணிகள் தாமதம் ஆனதால், ரிலீசை, பொங்கலுக்கு தள்ளி வைத்தனர்.
இதனால், இந்த முறையாவது திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இன்னும் சில நாட்களில், அயலான் 2-வது சிங்கில் வெளியாகும் என்றும், பொங்கலுக்கு தயாராக இருங்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.