Connect with us

Raj News Tamil

டாக்டர், டான் படங்களின் ஹிட் வரிசையில் இணையும் அயலான்..?

சினிமா

டாக்டர், டான் படங்களின் ஹிட் வரிசையில் இணையும் அயலான்..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுவரை இப்படம் பெற்ற வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, படம் வெளியான 6 நாட்களில் 64 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. அதேபோல், அயலான் படமும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top