தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் , தமிழில் வெளியான ஆரம்பம், பெங்களூரு நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரமாண்ட படமான பாகுபலியில் வில்லனாக நடித்து அனைவரின் கவனைத்தை ஈர்த்தார். இந்த நிலையில் ராணாவின் நடிப்பில் ராணா நாயுடு என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
அதில் ஆபாசக்கட்சிகள், அறுவெறுப்பான காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டித்து பதிவிட்டனர். புகழ் பெற்ற குடும்பத்தை சேர்ந்த நடிகர் இதுபோன்ற தொடரில் நடிக்கலாமா என்றும் விமர்சனம் செய்தனர். இதையடுத்து நடிகர் ராணா, அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த தொடரை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், தனியாக பாருங்கள் என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.